பங்களாதேஷ்:இரு வாரங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் நிகழ்ந்த ரானா ப்ளாசா கட்டிட விபத்து அசம்பாவிதத்தில், 17 நாட்களுக்குப் பின்னர் இளம் வயது பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு வாரங்களுக்கு முன் உலகை உலுக்கிய பங்களாதேஷ் ரானா ப்ளாசா கட்டிட விபத்தில் இதுவரை 1050 பேர் மரணித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது. மரணித்தவர்களின் தொகை 1050 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட உரிமையாளர் உட்பட 9 பேரைக் காவல்துறை இவ்விபத்து தொடர்பாக கைது செய்துள்ளது. குறைந்த விலைக்கு ப்ராண்ட் உடைகளைத் தயாரித்து வெளிநாடுகளில் விற்கும் வெளிநாட்டு கம்பெனிகளின் உடை தயாரிப்பு கூடமாகவும் இக்கட்டிடம் செயல்பட்டு வந்துள்ளது. உரிய பாதுகாப்பு எதுவும் இன்றி மிகக் குறைந்த ஊதியத்தில் அளவுக்கு அதிகமாக பணியாளர்கள் இக்கட்டிடத்தில் பணி செய்ய வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 17 நாட்களாக மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதற்கு மேலும் கட்டி இடிபாடுகளுக்கு இடையில் எவரும் உயிருடன் இருப்பர் என்ற நம்பிக்கையினை மீட்புப் பணியாளர்கள் முற்றிலும் இழந்து விட்டனர்.
இந்நிலையில் அதிசயமாக ரேஷ்மா பேகம் எனும் இளம் பெண் உயிருடன் மீட்கப் பட்டுள்ளார். இவர் கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தருணத்தில் கூடியிருந்த மக்கள் உணர்ச்சி மிகுதியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததோடு பலர் அவ்விடத்திலேயே தரையில் வீழ்ந்து பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேஷ்மா, சிகிட்சைக்குப் பின்னர் பேசிய போது, 'நான் இடிபாட்டுக்குள் சிக்கிக் கொண்ட போது உண்பதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை. என்னிடம் வெறும் இரு பாட்டில் தண்ணீர் மட்டும்தான் இருந்தது. அதுதவிர, மீட்பு பணியிலிருந்தவர்களுக்கு என்னை மீட்க சிக்னல் செய்வதற்கு உதவியாக ஒரு குச்சியும் என்னிடம் இருந்தது. உதவி கேட்டு நான் செய்த சைகையினையோ கூச்சலையோ எவரும் செவிமடுக்கவில்லை" என்று கூறினார்.
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் முஹம்மது ருபெல் ரானா இவரின் கூக்குரலை 17 நாட்களுக்குப் பின்னர் கேட்டுள்ளார். தொடர்ந்து குரல் வந்த இடத்திலுள்ள இரும்புக் கம்பிகளையும் இடிபாடுகளையும் நீக்கிவிட்டு உள்ளே உற்று நோக்கிய வேளையிலேயே உள்ளிருந்து ஒரு குச்சி ஆடுவதைத் துவாரத்தின் வழியாக கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற மீட்புப் பணியாளர்களுக்கும் செய்தி தெரிவித்து, அனைவரின் கடின முயற்சியால் ரேஷ்மா பேகம் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டார்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!