பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியானது: நாமக்கல் மாணவர்கள் 2 பேர் முதலிடம்!


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி 27–ந் தேதி வரை நடைபெற்றது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில், தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

 காலை 10 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டதும் அடுத்த சில வினாடிகளில் இணையதளங்களில்  மாணவ–மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகின.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் (நிக் சென்டர்) மற்றும் அனைத்து மாவட்ட, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

நாமக்கல் மாணவர் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகிய இருவரும் 1189 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தனர். 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!