+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!


நாளை (09.05.2013) வியாழக் கிழமை  +2 தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகிறது. இதனை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்ரல் 13ஆம் தேதி முடிந்தது.

இந்நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு சென்னை கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனரகத்தில் வெளியிடப்படுகின்றன.

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில்  http://tnresults.nic.in
 இணைய தளத்தில் வெளியிடப்படும்.

2 comments:

Ebrahim Ansari said...

We wish success for all students of our schools. We pray for same.

அப்துல் ஜலீல்.M said...

எல்லோரும் வெற்றி பெற வாழ்த்துகள்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!