தங்கம் விலை குறையுது.. பெட்ரோல் விலை குறையுது.. ஆனால், இது நல்லதில்ல!


 
 
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கிடுகிடுவென குறைந்து வருகிறது, இதன் விலை மீண்டும் கொஞ்சமாக கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், வீழ்ச்சியோடு ஒப்பிடுகையில் விலை ஏற்ற விகிதம் கொஞ்சமே. அதே போல கச்சா எண்ணெயின் விலையும் படுவேகத்தில் சரிந்து வருகிறது.

 இதனால் பெட்ரோல்-டீசல் விலையும் உலகம் முழுவதும் தொடர்ந்து குறைய ஆரம்பித்துள்ளது. இந்தியாவிலும் இந்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 வரை குறைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.இதனால் தங்க நகைகள் வாங்குவோரும் பைக்- கார் ஓட்டிகளும் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் பல நாடுகளின் பொருளாதார நிபுணர்களும் அடுத்து நடக்கப் போவதை நினைத்து அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.


விலை குறைஞ்சா இந்த பொருளாதார நிபுணர்களுக்கு ஆகாதோ என்று அவர்களைத் திட்ட வேண்டாம். காரணம், வரலாறு அப்படி!எப்போதெல்லாம் தங்கத்தின் விலை அடியோடு சரிந்திருக்கிறதோ அதைத் தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை டமார் ஆகியிருக்கிறதோ அதைத் தொடர்ந்தும் பொருளாதாரத் தேக்கம் உலகை கவ்வியிருக்கிறது.

அமெரிக்காவுக்கு சளி பிடித்தால் இந்தியாவும் உகாண்டாவும்...அதிலும் குறிப்பாக அமெரிக்காவையே இந்த பொருளாதாரத் தேக்கம் முதலில் தாக்கியிருக்கிறது.

 அமெரிக்காவுக்கு சளி பிடித்தால் இந்தியாவும் உகாண்டாவும் கூட தும்மியாக வேண்டுமே... இந்தப் பயம் தான் அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் பிடிக்கத் துவங்கியுள்ளது.இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம்.. 2008ம் ஆண்டு தான். அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்து தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் லேசாக குறைய ஆரம்பித்து, படுவேகத்தில் சரிய ஆரம்பித்தன.

இதையடுத்தே அமெரிக்காவில் பொருளாதாரத் தேக்கம் ஆரம்பமானது
வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக திவால் ஆயின. அவை கொடுத்த வீட்டுக் கடன்கள் வங்கிகளையே மூழ்கடித்தன.1929ம் ஆண்டில் 'கிரேட் டிப்ரஸன்' எனப்படும் அமெரிக்கா சந்தித்த மாபெரும் பொருளாதார முடக்கத்துக்குப் பின் அந்த நாடு சந்தித்த பெரிய பொருளாதாரத் தேக்கம் இது தான். அந்த கிரேட் டிப்ரஸன் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் மூழ்கடித்தது.

இத்தனைக்கும் இப்போது இருப்பது மாதிரி இந்த அளவுக்கு ஒரு நாட்டைச் சார்ந்து இன்னொரு நாட்டின் பொருளாதாரம் அப்போது இருக்கவில்லை.
 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!