அமீரகம் துபையில் இயங்கிவரும் TNTJ அதிரை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

03/05/2013 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் அமீரக துபையில் இயங்கிவரும் TNTJ அதிரை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு துபை மண்டல TNTJ செயலாளர் ஜனாப் N.அஸ்ரப் அலி அவர்கள் தலைமை ஏற்று மார்க்க சொற்பொழிவுடன் கூட்டம் இனிதே ஆரம்பம் ஆனது.

இக்கூட்டத்தில் அனைவர்கள் முன்னிலையில் அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப்பணிக்கு வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் மாதசந்தா வசூல் பணம் வரவுசெலவு கணக்குகள் விபரம் அனைத்தும் அனைவர்கள் முன்னிலையிலும் அறியப்படுத்தப்பட்டன.

அதன் பிறகு துபையில் இயங்கிவரும் TNTJ அதிரை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது பற்றி கலந்துரையாடி ஒருமனதாய் கீழ் கண்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன.


பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்
------------------------------------------------------------------------------------------------------------

பொறுப்பின் முதலாமவர் : A.சாகுல் ஹமீது

பொறுப்பின் இரண்டாமவர் : J.நஸீர் அகமது

பொறுப்பின் மூன்றாமவர் : S.நெய்னா முகம்மது


துணை பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெயர் விபரங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------

துணை பொறுப்பின் முதலாமவர் : M.மக்தூம் நெய்னா

துணை பொறுப்பின் இரண்டாமவர் : M.முகைதீன்அப்துல் காதர்


பொறுப்பேற்றிருக்கும் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்புடன் தாங்களின் பணியை சிறப்புடன் செய்திடவும் அதற்க்கு மற்ற அனைவர்களும் உறுதுணையாக இருந்திடவும் துபாய் மண்டல TNTJ செயலாளர் ஜனாப் N.அஸ்ரப் அலி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.







செய்தித்தொகுப்பு : அதிரை.மெய்சா

1 comments:

அதிரை ரியாஸ் said...

தவ்ஹீத் ஜமாஅத் பனி சிறக்க வாழ்த்துக்கள்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!